அத்தியவசிய சேவை வர்த்தக நிலையங்கள்11.00 மணி வரை திறந்திருக்கும்!!!

இன்று வியாழக்கிழமை (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4.00 மணி வரை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ள முழு நேர பயணக்கட்டுப்பாட்டு நடைமுறையானது ஊரடங்கு உத்தரவு போன்ற நடைமுறையாகவே காணப்படும் என்பதோடு காத்தான்குடியில் அத்தியவசியக் கடைகள் உட்பட எந்தவொரு வர்த்தக நிலையங்களும் திறக்க முடியாது என்பதுடன் பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று காத்தான்குடி நகருக்கான Covid–19 தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

எனவே, இன்றிரவு முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட இருப்பதால் இன்று வியாழக்கிழமை அத்தியவசிய சேவைகள் மாத்திரம் இரவு 11.00 மணி வரை திறந்திருக்க தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது.
எனவே, பொது மக்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் முன் கூட்டியே தங்களது அத்தியவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் என்று அந்த செயலணி அறிவித்துள்ளது.







அத்தியவசிய சேவை வர்த்தக நிலையங்கள்11.00 மணி வரை திறந்திருக்கும்!!! அத்தியவசிய சேவை வர்த்தக நிலையங்கள்11.00 மணி வரை திறந்திருக்கும்!!! Reviewed by Editor on May 13, 2021 Rating: 5