(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணனனின் வழிகாட்லில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம் .அஸ்மி தலைமையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (13) இடம் பெற்றது .
இதன் போது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன, கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் கே.டீ. சுஜித் பிரியந்த, கல்முனை பொலிஸ் நிலைய பெரும் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெமீல் உட்பட கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இதன் போது மாவட்ட பொது சுகாதர பரிசோதகர் ஏ.எம்.ஜெளபர், பிரதேச மேற்பார்வை பொதுச்சுகாதர பரிசோதகர் எம்.பாறூக், பொது சுகாதர பரிசோதகர்கள், கல்முனை தெற்கு சுகாதர வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றல்..
Reviewed by Editor
on
May 13, 2021
Rating:
