இலங்கையில் மேலும் 44 பேர் பலி

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 125,360 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மேலும் 44 பேர் பலி இலங்கையில் மேலும் 44 பேர் பலி Reviewed by Sifnas Hamy on May 22, 2021 Rating: 5