வழமைக்கு திரும்பும் காஸா, கட்டார் 500மில்லியன் டொலர் உதவி!!!

(றிஸ்வான் சாலிஹூ)

இஸ்ரேலிய தாக்குதலால் பாரிய அழிவுகளையும், நிம்மதியற்றவர்களாகவும் இருந்த பலஸ்தீன காஸா மக்கள் இருநாட்டு போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் தற்போது தங்களுடைய வழமையான வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள்.

இஸ்ரேலிய தாக்குதலில் பாரிய அழிவைக் கண்ட காசாவின் புனரமைப்புக்கு கட்டார் நாட்டின் அமீர் எச் எச் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியின் உத்தரவின் பேரில் கட்டார் நாட்டு அரசு 500 மில்லியன் டொடலரை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

கட்டார் அரசு காஸா மக்களுக்கு வழங்கிய இந்த மானியம் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவுவதோடு, அந்த வீடுகளில் கூடுதலாக சுகாதார, கல்வி மற்றும் மின்சாரத் துறைகளிலும், குறிப்பாக சுகாதார, கல்வி மற்றும் மின்சாரத் துறைகளில் சேவை வசதிகளை புனரமைக்க பங்களிக்கும் என்று கட்டார் அரசு தெரிவித்துள்ளது.






வழமைக்கு திரும்பும் காஸா, கட்டார் 500மில்லியன் டொலர் உதவி!!! வழமைக்கு திரும்பும் காஸா, கட்டார் 500மில்லியன் டொலர் உதவி!!! Reviewed by Editor on May 27, 2021 Rating: 5