அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புகையிரதங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
santa Clara Valley Transportation Authority rail yard in San Jose இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்களும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட நபரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல கொல்லப்பட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என சான்டா கிளாரா
கவுண்டியின் செரீவ் ரசல்டேவிஸ் சரியான எண்ணிக்கையை தெரிவிக்க முடியவில்லை ஆனால் பலர் உயிரிழந்துள்ளனர்
காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
புகையிரத தொழிலாளர்களின் கூட்டத்தின் போதே துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிற்சங்க கூட்டமொன்றின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என தனது மகன் தெரிவித்தார் என தொழிலாளி ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த வருடம் 230 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்
துப்பாக்கி சூட்டு சம்பவம் - பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்....
Reviewed by Admin Ceylon East
on
May 26, 2021
Rating:
Reviewed by Admin Ceylon East
on
May 26, 2021
Rating:


