நாட்டில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!!

நாட்டில் மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் ரத்தொட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடஹபுவிட கிராம சேவகர் பிரிவு, கண்டி மாவட்டத்தின் கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகம்பாய கிராம சேவகர் பிரிவின் திப்புட்ட கிராம் மற்றும் கொஸ்கஸ்தென்ன கிராமம், புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெத கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


நாட்டில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!! நாட்டில் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகிறது!!! Reviewed by Editor on May 11, 2021 Rating: 5