பெருநாள் தினத்தில் கறுப்புக்கொடி கட்டக்கோரியது கட்சியின் தீர்மானம் அல்ல!!!


(றிஸ்வான் சாலிஹூ)

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபின் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) பொத்துவிலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தலைவர் ரிஷாத் பதியுதீனின் கைதை கண்டிக்கும் முகமாக பெருநாள் தினத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கறுப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருந்தார். இது அவருடைய தனிப்பட்ட அறிவிப்பேயன்றி கட்சியினுடைய அறிவிப்பு அல்ல என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ.எம்.ஷிபான் எமது செய்தி தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

20 ஏ வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக கட்சியினால் ஒழுக்க விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

கடந்த 2021.05.09ஆம் திகதி கட்சியினுடைய தீர்மானமாக ,செயலாளர் சுபைர்தீன் ஹாஜியார் அவர்களால் தலைவரின் விடுதலைக்காக ஸதக்காக்கள் செய்தல்,துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுதல் , குர்ஆன் ஓதுதல், இஸ்திஃபார் செய்தல் போன்றவற்றை செய்யும்படி உத்தியோகபூர்வமான அறிவிப்பு செயலாளரின் ஒப்பமிட்டு வெளி வந்திருந்தது.

இந்த நிலையிலேயே பெருநாள் தினத்தன்று அதனை கரிநாளாக்கும் அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கட்சியின் தீர்மானமாக இருந்திருந்தால் செயலாளரோ, புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தலைவரோ, தவிசாளரோ உத்தியோகபூர்வமாக அறிவித்து இருப்பார்கள்.

பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையைக் கோரி ஹரீன் பெனாண்டோ தொடர்ந்தும் கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்துக்கு வருவது போல் எமது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் இதுவரை செய்யவில்லை.

பாராளுமன்றத்தில்  சஜித் பிரேமதாச அணியினர் ரஞ்சனின் விடுதலையை கோரி கறுப்பு ஆடைகளை அணிந்து வந்தது போல் எமது கட்சியின் தலைவருக்காகவும் அணிந்து வரும்படி எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களை நோக்கி கோரிக்கை விடுக்க மனமில்லாமலும், தைரியமில்லாது போனதும் கட்சியின் துரதிர்ஷ்டமே.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் இவ்வறிவிப்புக்கு அவருடைய ஆதரவாளர்கள் சிலர் வேண்டுமென்றால் செவிசாய்க்கலாம். ஆனால் ஒட்டுமொத்த மக்களும் செவிசாய்க்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது என்று மாநகர சபை உறுப்பினர் ஷிபான் தெரிவித்துள்ளார்.

பெருநாள் தினத்தில் கறுப்புக்கொடி கட்டக்கோரியது கட்சியின் தீர்மானம் அல்ல!!! பெருநாள் தினத்தில் கறுப்புக்கொடி கட்டக்கோரியது கட்சியின் தீர்மானம் அல்ல!!! Reviewed by Editor on May 11, 2021 Rating: 5