தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை (25) செவ்வாய்க்கிழமை, 31ஆம் திகதி (திங்கட்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறை கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் எனவும், வாகனங்கள் பயணிப்பதற்கு அனுமதி இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
