சம்மாந்துறை கொரோனா பரவல் தடுப்பு செயலணியின் அவசர வேண்டுகோள்!!!

நாட்டில் மிகத்தீவிரமாக பரவிவரும் கொரோணா வைாஸ் மூன்றாவது அலையின் தாக்கம் எமது சம்மாந்துறைப் பிரதேசத்திலும் இணங்காணப்பட்டுள்ள தோடு இம்மூன்றாம் அலையின் பின்னர் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் எமதூரானது தீவிரபரவலுக்குட்பட்டு முற்றாக முடக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை 2021/05/25 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளை கண்டிப்பாக  கடைப்பிடித்து நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

O1. சம்மாந்துறை பொதுச் சந்தையின் உட்பகுதி மூடப்படும் என்பதோடு மருந்தகங்கள் ( பாமசி ), பலசரக்குக்கடைகள் மற்றும் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் தவிர்ந்த சகல அத்தியவசியமற்ற கடைகளும் குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் ( சலூன் ) உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் .


02. பாதையோர வியாபார நடவடிக்கைகள் யாவும் முற்றாக தடைசெய்யப்படுவதுடன் நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.


03. நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் கண்டிப்பாக அன்டிஜன் பரிசோனை அறிக்கையினை உடன் வைத்திருப்பதோடு , சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பேணி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும் . 


04. எழுமாறான அன்டிஜன் பரிசோனைகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் என்பதோடு இதற்கு சகல பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் . 


O5. அத்தியவசிய பொருட் கொள்வனவிற்காக மாத்திரம் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒருவர் மாத்திரம் வெளியிடங்களுக்கு வரமுடியும் என்பதோடு சிறுவர்கள் மற்றும் முதியோர்களை அழைத்து வருவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது . 


06. பொது இடங்களில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பொது மக்கள் கூடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பூரணமாக முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது . 


07. மத நிறுவனங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாதென்பதோடு முஸ்லிம் சமய மற்றும் இந்து கலாச்சார திணைக்களங்களின் சுற்று நிரூபங்களை பின்பற்றி நடக்குமாறும் வேண்டப்படுகிறீர்கள்.

மேற்படி தீர்மானங்களை புறக்கணித்து நடப்பவர்களுக்கு எதிராக தயவு தாட்சணியமும் இன்றி சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிளால் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கண்டிப்பாக அறியத்தருகிறோம்.


இப்படிக்கு 

கொரோணா பரவல் தடுப்பு செயலணி, பிரதேச செயலகம்

சம்மாந்துறை.



சம்மாந்துறை கொரோனா பரவல் தடுப்பு செயலணியின் அவசர வேண்டுகோள்!!! சம்மாந்துறை கொரோனா பரவல் தடுப்பு செயலணியின் அவசர வேண்டுகோள்!!! Reviewed by Editor on May 24, 2021 Rating: 5