அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிக்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு!!

(முஹம்மட் நளீர்)

அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் விவசாய பாடநெறியையும், பயிர்ச்செய்கையையும் வினைத்திறனுடன் மேற்கொள்ளும் பொருட்டு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் பதிவாளரினால் MFCD தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அந்நிறுவனத்தினால் 2000 லீட்டர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கி இன்று (11) செவ்வாய்க்கிழமை கல்லூரியின் பதிவாளர்  ஐ.பியாஸ் அவர்களிடம் MFCD அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சமீர் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இம்மகோன்னத பணியையிட்டு கல்லூரி நிருவாகம் குறித்த அமைப்பிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது.


அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிக்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு!! அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிக்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு!! Reviewed by Editor on May 11, 2021 Rating: 5