மின்சார சபையுடன் இணைந்ததாக GAIA Green Energy UVA Pvt (Ltd.) எனும் தனியார் நிறுவனத்துடன் 20 வருடகாலத்திற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊவா மாகாணத்திற்கு சொந்தமான பாடசாலைகள், வைத்தியசாலைகள், மாகாண சபை கட்டிடங்களில் காணப்படும் கூரைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மாகாண சபைக்கு சுமார் 40 MV இற்கும் மேலான மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மாகாண சபைக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 225 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப்பெறவுள்ளன.
அத்துடன் இந்த பாரிய வேலைத்திட்டத்தின் ஊடாக மாகாண சபையின் கீழ் புதிதாக சுமார் 500 வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
இந்த நிகழ்வில் GAIA Green Energy UVA Pvt (Ltd.) நிறுவனத்தின் பணிப்பாளர் சிவாஜி டி சொய்ஸா உள்ளிட்ட நிறுவனத்தின் பிரதானிகள், ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்ன உள்ளிட்ட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
Reviewed by Editor
on
May 11, 2021
Rating:

