மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 57வது ஜனன தினம் இன்று (29) சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆறுமுகன் தொண்டமான் புலமை பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இ.தொ.காவின் இளைஞர் அணி ஏற்பாட்டில் இந்த புலமை பரிசில் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் மலையகத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றுக்களை பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கு தெரிவான மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக இந்த புலமை பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் நிலவும் covid-19 நிலைமையை கருத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட குறித்த மாணவர்களின் வங்கி கணக்கில் புலமைப்பரிசில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் உயர் கல்வியை தொடர்வதற்கு உந்து சக்தியாக இது அமையும்.
அதேபோல் மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மடிக்கணணிகள் இன்னும் இரு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிகிக்கை எடுக்கப்பட்டும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
