(றிஸ்வான் சாலிஹு)
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை (14) அறிவித்துள்ளது.
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று 12:03 மணிக்கு 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் தாக்கத்தால் தற்போது இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, இலங்கையின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்பாக அறிவிக்கப்படுகின்றன ”என்று வானிலை ஆய்வுத் துறையின் தேசிய சுனாமி ஆரம்ப எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை!!!
Reviewed by Editor
on
May 14, 2021
Rating:
