நவீன தகவல் தொழிநுட்ப அறை மாணவர்கள் பாவனைக்கு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் அங்குள்ள மாணவர்களின் நலன் கருதி "நவீன தகவல் தொழிநுட்ப அறை" அமைக்கப்பட்டு Iconic Youths சமூக சேவை அமைப்பினால் அங்குள்ள மாணவர்களின் பாவனைக்காக கடந்த வெள்ளிக்கிழமை (07) கையளிக்கப்பட்டுள்ளது.

Iconic Youths அமைப்பின் தலைவர் யு.எல். தில்ஷான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி, காத்தான்குடி சிறுவர் இல்ல பொறுப்புதாரி ஜனாப். அலாவுதீன், Iconic Youths அமைப்பின் ஆலோசகர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த தகவல் வள நிலையமானது எமது உடன் பிறவா சிறார்களும் சிறந்த கல்வியின் மூலம் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்ற நன்னோக்கோடு இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என்று அமைப்பின் தலைவர் தில்ஷான் தனது தலைமையுரையில் தெரிவித்தார்.

அத்தோடு, இதற்கான பூரண நிதியுதவியினை வழங்கிய அக்கரைப்பற்றை சேர்ந்த ஓமான் நாட்டில் தொழில் புரியும் சகோதரருக்கும், களப்பணி புரிந்த எமது அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.


                                                   

                                                   

             






நவீன தகவல் தொழிநுட்ப அறை மாணவர்கள் பாவனைக்கு!!! நவீன தகவல் தொழிநுட்ப அறை மாணவர்கள் பாவனைக்கு!!! Reviewed by Editor on May 10, 2021 Rating: 5