நசீர் எம்.பியின் முயற்சியால் மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!!

(றிஸ்வான் சாலிஹூ)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசிர் அஹமட் (Eng) அவர்களின் முயற்சியில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

"நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு"அரச கொள்கையில் குறிப்பிட்ட கல்விக்கான பிரதான வேலைத்திட்டமான தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 வரை உயர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஏறாவூர் அல் - அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் என்பன தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இப்பாடசாலைகளின் ஆரம்ப கட்ட அபிவிருத்தி வேலைகளுக்காக தலா ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் ரூபா இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கப்படுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு மொனராகலை சியம்பாலாண்டுவ மகா வித்தியாலயத்தில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2021ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கும் அபிவிருத்தி குழு அதிகார பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளை அக்குறிப்பிட்ட திகதியில் ஆரம்பித்து வைப்பதற்கான அதிகாரத்தினை அவ்வப்பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்களிடம் அரசாங்கம் வழங்கியுள்ளது.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, ஏறாவூர் நகர், காத்தான்குடி  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் என்ற அடிப்படையில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 2021 ஜூன் 06ஆம் திகதி ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை, காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய இம்மூன்று பாடசாலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.




நசீர் எம்.பியின் முயற்சியால் மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!! நசீர் எம்.பியின் முயற்சியால் மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்வு!!! Reviewed by Editor on May 20, 2021 Rating: 5