(றிஸ்வான் சாலிஹூ)
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டை மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்க ஆசி கோரும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லீம் மத வழிபாட்டு தலங்களில் விஷேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (08) சனிக் கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கினங்க இறக்காமம் பிரதேச அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து நாட்டையும் நாட்டு அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஷெய்க் ஏ.கே. அப்துல் ரஊப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் அல்-ஹாஜ் எம்.எம்.நஸீர் அவர்களும் விஷேட அதிதியாக இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் அல்-ஹாஜ் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், இறக்காம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜே.எம். ஜெமீல் உட்பட ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள், பள்ளி நிருவாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
