இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த கல்முனைக்குடி-03 செயிலான் வீதியைச் சேர்ந்த சம்சுன் நிஹாரா (30) என்பவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று (07) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 20ம் திகதி பிரசவ வலி காரணமாக மட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற போது வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற பின் குறித்த தாயின் உடல்நிலை காரணமாக அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தாய் கல்முனை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! Reviewed by Editor on May 08, 2021 Rating: 5