(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) ஆகிய தேசிய பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களில் பரீட்சை பெறுபேறுகளை இதுவரையும் பெறாத மாணவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.
அதனடிப்படையில், க.பொ.த (ச/த) பரீட்சையில் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையிலும், க.பொ.த (உ/த) பரீட்சையில் 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரைக்கும் தங்களது பரீட்சை பெறுபேறுகளை இது வரையிலும் பெறாத மாணவர்கள் எதிர்வரும் 2021.05.10,11,12ஆம் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை) திகதிகளில் காலை 9.00மணி முதல் நண்பகல் 12.00மணி வரை பாடசாலைக்கு சமுகமளித்து, தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி மேற்படி ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் படி கல்லூரியின் அதிபர் எஸ்.றிபாயுடீன் அம்மாணவர்களை கேட்டுக் கொள்கின்றார்.
Reviewed by Editor
on
May 03, 2021
Rating:
