இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையில் காஸாவில் இடம்பெறும் தாக்குதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இனிவரும் வாரங்களில் இது முழுநேர போராக மாற்றமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருதரப்பு பரஸ்பர ஏவுகணைத் தாக்குதல்களால் 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இவ்வாறு பலியானோரில் 28 சிறுவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்காக கூடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 580 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலிருந்து காஸாவை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக இருதரப்பினரும் பரஸ்பர வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன.
