பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு!!!

முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை  தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பிலான சிறப்பு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

இவ்வாறு நபர்களை தூக்கிச் செல்லும் போது கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் தூக்கிச்செல்லும் அதிகாரிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் கொண்டு செல்வதால் பலருக்கும் பரவும் ஆபத்து உள்ளது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனிமேல், முகக்கவசம் இல்லாத நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டக்கூடாது என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.



பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு!!! பொலிஸ்மா அதிபரின் அதிரடி உத்தரவு!!! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5