போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மீண்டும் சேவையில்!!!

நாளை (17)அதிகாலை நான்கு மணிக்கு போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் வழமை போல சேவையில் ஈடுபடும் என  இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனினும், 31 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இடம்பெறாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளைச் சேர்ந்த தொழிலாளர்களிற்காக சில பேருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளதோடு, அடையாள அட்டைகளைச் சோதனையிடும் நடவடிக் கையை பொலிஸார் மேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.

நன்றி - தினக்குரல்



போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மீண்டும் சேவையில்!!! போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மீண்டும் சேவையில்!!! Reviewed by Editor on May 16, 2021 Rating: 5