மாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அறிவித்தல்!!!

(றிஸ்வான் சாலிஹு)

COVID-தொற்றுக்குள்ளானவர்கள் நாளை (17) திங்கட்கிழமை முதல் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாம் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளில் இதுவரை உத்தியோகபூர்வமான எந்தவொரு முடிவுகளும் எடுக்கப்படாத காரணத்தினால், தற்போதைய நடைமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

எனவே , COVID தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளும் ஒரு மருத்துவமனையில் அல்லது ஒரு இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் கூடிய விரைவில்  அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அறிவித்தல்!!! மாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அறிவித்தல்!!! Reviewed by Editor on May 16, 2021 Rating: 5