சம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி,பணிப்பாளர் களத்தில்!!!

 (ஐ.எல்.எம். நாஸிம் - சம்மாந்துறை)

இலங்கையில் மிகவேகமாக பரவிவரும் கொரோனா அலையை கிழக்கில் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை வீதிகளில் காரணமின்றி உலாவித்திரிவோர், சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நடமாடும் வியாபாரிகள், உட்பட பொதுமக்கள் பலருக்கும் இன்று (17) அண்டிஜன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 80 மேற்பட்டோருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதோடு அதில்  ஒருவர் உஹன பிரதேசத்தில் இருந்து தொழில் நிமித்தமாக சம்மாந்துறை பிரதேசத்துக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் பரிசோதனையானது சம்மாந்துறை பிரதேசத்தின் முக்கிய பிரதேசங்களான விளினையடிச்சந்தி, ஹிஜ்றா சந்தி போன்ற இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படுவதோடு பொதுச்சுகாதார பரிசோகதர்கள் மற்றும் இராணுவத்தினர் வாகனங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுகாதார நடமுறையை பேணாதவர்களை கண்காணித்து வருவதுடன் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி,பணிப்பாளர் களத்தில்!!! சம்மாந்துறையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி,பணிப்பாளர் களத்தில்!!! Reviewed by Editor on May 17, 2021 Rating: 5