(ஏ.தாஜஹான்)
கல்விப் பணியில் இன்றிலிருந்து ஓய்வு நிலையினை பெற்றுக் கொள்ளும் மீரா லெவ்வை முஹம்மது முகைதீன் (SLEAS) அவர்கள்.
1961.05.17 இல் மீராலெப்பை அவர்களின் வாரிசாக அக்கரைப்பற்றில் அவதரித்த முகைதீன் சேர் ஆரம்பக் கல்வியினை அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியினை அக்கரைப்பற்று தேசிய பாடசாலையிலும் கற்று வர்த்தகப் பிரிவில் BC0M பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும், MA- Economics பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டு ஆசிரியப் பணியில் 1984.12.27 இல் பதுளை அல் அதான் வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை, பொத்துவில் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகிய பாடசாலைகளில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை வழங்கியதன் நிமித்தம் இறைவனின் அருளால் 1990.06.01 கல்வி நிர்வாக சேவைக்குள் ( SLEAs) தெரிவு செய்யப்பட்டார்.
திருமண பந்தத்தில் பொத்துவிலில் இணைந்து கொண்ட இவர், கல்முனைப் பிராந்திய கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பல இடங்களில் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
