ரிசாத் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர அமர்வுகளில் பங்கேற்க அனுமதி!!!

 பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜெயசேகர ஆகியோர் விரும்பினால் அவர்களை பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி அளித்துள்ளார்.பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் நாளை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு கூட உள்ளது.

இதன்படி பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சபை அமர்வுகளுக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரை கேட்டுள்ளார்.

அதேபோல் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர சபைக்கு வர விரும்பினால் அவரை அழைத்து வருவதற்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு படைக்கள சேவிதர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை கேட்டுள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)





ரிசாத் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர அமர்வுகளில் பங்கேற்க அனுமதி!!! ரிசாத் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர அமர்வுகளில் பங்கேற்க அனுமதி!!! Reviewed by Editor on May 17, 2021 Rating: 5