மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) சனிக்கிழமை காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்து காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.
முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த போது கீழ் பகுதியில் இருந்து புகை வெளி வந்துள்ளதோடு முச்சக்கர வண்டி தீப்பற்ற ஆரம்பித்தவுடன், முச்சக்கர வண்டி முழுவதுமாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீப்பற்றிய முச்சக்கரவண்டி, அதிஸ்டவசமாக தப்பிய சாரதி!!!
Reviewed by Editor
on
May 15, 2021
Rating:
