பிரதேச செயலகங்களின் அவசர அழைப்பு பிரிவு!!!

பயணக்கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ரீதியான அவசர அழைப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குறித்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

அனைத்து மாவட்ட செயலகங்களிலும் இந்த மாவட்ட அவசர அழைப்பு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மத்திய நிலையம், அலரி மாளிகையில் உள்ள ஜனாதிபதி செயலணியின் பிரதான செயற்பாட்டு மையத்துடன் இணைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரதான செயற்பாட்டு மையம் பிரதமரினது செயலாளரின் கண்காணிப்பில் வழிநடத்தப்படுகிறது. 

எனவே, பொதுமக்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தால், தாம் வசிக்கும் மாவட்டத்தின் அவசர அழைப்பு மத்திய நிலையத்தை தொடர்புகொண்டு, பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அரசாங்க அதிகாரியுடன், ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் மாவட்ட அவசர அழைப்பு மத்திய நிலையம் அமைக்கப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்படுள்ளன.




பிரதேச செயலகங்களின் அவசர அழைப்பு பிரிவு!!! பிரதேச செயலகங்களின் அவசர அழைப்பு பிரிவு!!! Reviewed by Editor on May 15, 2021 Rating: 5