பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன.
ரிஷாட் பதியுதீன் 1990 களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே, எனக்கு அறிமுகமானவர் என்ற வகையில், அவர் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்தபோதிலும், ஒருபோதும் தீவிரவாதியாக இருக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிகவும் திறமையற்ற ஆட்சியின், பிழையான நிர்வாக செயல்முறை மற்றும் தடுமாற்றங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு, ரிஷாட் பதியுதீன் ஒரு பலிக்கடாவாக பயன்படுத்தப்படுகின்றார்" என்று மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 24, 2021
Rating:
