திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் சிறுமி ஒருவர் வீட்டுக்கு முன்னால் உள்ள நீரோடையில் விழுந்து உயிரிந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி சிராஜ் நகர் மயில் தீவு எனும் முகவரியை சேர்ந்த ஏ.அகிலா வயது 02 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுமியை காணவில்லை என சுமார் அரைமணி நேரம் தாய் தேடி வந்த நிலையில் நீர் ஓடையில் நானூறு மீற்றர் தூரத்தில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்த சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இரண்டு வயது சிறுமி பலி! காரணம் வெளியானது. - படங்கள் இணைப்பு
Reviewed by Sifnas Hamy
on
May 24, 2021
Rating:
