
படை வீரர்கள் நினைவு மாதத்தை பிரகடனப்படுத்தி தேசிய படை வீரர்கள் கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு இன்று (04) செவ்வாய்க்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் பதில் தலைவர் திருமதி சோனியா கோட்டேகொடவினால் படை வீரர்கள் கொடி ஜனாதிபதி அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.
மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சுதந்திரமானதொரு தேசத்திற்காக அர்ப்பணிப்புகளை செய்த படை வீரர்களை நினைவுகூரும் வகையில் படை வீரர்கள் மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மே மாதம் முதலாம் வாரத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு தேசிய படை வீரர்கள் கொடி அணிவிக்கப்பட்ட நாள் முதல் படை வீரர்கள் நினைவு மாதம் ஆரம்பமாகிறது.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
Reviewed by Editor
on
May 04, 2021
Rating: