”ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய வேலைத்திட்டம்


அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று (01) சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை ஜனாதிபதி நாட்டினார்.



வீட்டின் மஞ்சள் தேவையை தத்தமது சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 5 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு மஞ்சள் கன்றுகள் வழங்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உயர்தர மஞ்சள் கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
”ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய வேலைத்திட்டம் ”ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திற்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய வேலைத்திட்டம் Reviewed by Editor on May 01, 2021 Rating: 5