தனது சொந்த வீட்டை மார்பு சிகிச்சை வைத்தியசாலைக்காக சதகதுல் ஜாரியாவாக வழங்கிய முஸ்லிம் தனவந்தர் அல்ஹாஜ் மர்ஹூம் ஏ.ஆர். தாஸிம் அவர்கள்.
இவர் காலி மாநகர சபையின் இரண்டாவது மேயர். மாநகர வரலாற்றில் நீண்டகாலம் மேயராகப் பதவி வகித்தவர். பொதுவ காலி மாநகரின் மேயராக முஸ்லிம்கள் பணியாற்றியிருக்கிறார்கள். பிரதி மேயர் பதவியை பல முஸ்லிம்களும் வகித்திருப்பதோடு தற்போது பௌசி நியாஸ் அவர்கள் பிரதிமேயராகப் பணியாற்றுகிறார்.
ஏ.ஆர். தாஸிம் அவர்கள் பிரபல தனவந்தராக இருந்தார். தனது வர்த்தகத்தின் மூலம் கிடைத்த இலாபங்களை மக்கள் சேவைக்காகவே பயன்படுத்திவந்தார்.1952ம் ஆண்டு காலப்பகுதியில் காலி நகரில் காச நோய் மிகவும் வேகமாகப் பரவி வந்தது. இந்த விடயம் அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மர்ஹூம் ஏ.ஆர். தாஸிம் அவர்கள் தனது சொந்த வீட்டை மார்பு சிகிச்சை வைத்தியசாலைக்காக சதகதுல் ஜாரியாவாக வழங்கினார்.
இந்த வைத்தியசாலை தற்போது ”தாஸிம் மார்பு சிகிச்சை நிலையம்”என்று அழைக்கப்படுகிறது தற்சமயம் இது காலி கராபிடிய வைத்தியசாலையின் கீழ் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த வீட்டை மார்பு சிகிச்சை வைத்தியசாலைக்காக வழங்கிய முஸ்லிம் நபர்..
Reviewed by Editor
on
May 01, 2021
Rating:
Reviewed by Editor
on
May 01, 2021
Rating:

