இன்று பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகிறது!!!

கொவிட்-19 காரணமாக நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (05) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு, பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தெல்தர கிராம சேவகர் பிரிவுகள்,எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல்லேகம, உடகம மற்றும் புதிய நகர் கிராம சேவகர் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தின் குட்டிவில கிராம சேவகர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் வலல்கொட, சுதுகல, ரத்கங்க மற்றும் பனமுர கிராம சேவகர் பிரிவுகள், வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவுகள் ஆகிய மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இன்று பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகிறது!!! இன்று பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகிறது!!! Reviewed by Editor on May 05, 2021 Rating: 5