எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் 'ஸ்புட்நிக்' என்ற கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கின்றது.
மக்களுக்கு முறையான விதத்தில் தடுப்பூசி ஏற்றப்படுகின்றதா? என்பதை ஆராய்ந்த பின்னர் இந்தத் தடுப்பூசி தொகையை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியாவின் 'சீரம்' நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகள் கிடைத்திருந்தன.
இதனைத் தொடர்ந்து சீனாவிடமிருந்து 6 இலட்சம் 'சைனோபாம்' தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்தன. இதேவேளை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் அமெரிக்காவின் 'பைசர்' நிறுவனத்துடனும், ரஷ்யாவின் ஸ்புட்நிக் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன.
ஸ்புட்நிக் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு 13 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவிருக்கின்றன. பைசர் நிறுவனம் இந்த மாதத்தில் 35 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 3 மாதங்களில் 1 இலட்சம் தடுப்பூசிகளையும், அதனைத் தொடர்ந்து 10 இலட்சம் தடுப்பூசிகளையும் இலங்கைக்கு வழங்க பைசர் நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் அஷ்ரா செனேக்கா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையும் தற்சமயம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Reviewed by Editor
on
May 05, 2021
Rating:
