சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அவசர அறிவித்தல்...

நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட 07ம் கிராம சேவகர் பிரிவில் ஒரு கொறோனா தொற்றாளர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், 13ம் கிராம சேவகர் பிரிவில் மற்றுமொரு கொறோனா தொற்றாளர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலுமாக இருவர் அடையாளம்காணப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் 07ம் கிராமசேவகர் பிரிவிலும் தொற்றாளராக இன்று (26) மொத்தமாக மூன்று நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆகவே, அனைத்து பொதுமக்களும் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றி எமது பிரதேசத்தை கொறோனா தொற்றிலிருந்து பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.




சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அவசர அறிவித்தல்... சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அவசர அறிவித்தல்... Reviewed by Admin Ceylon East on May 26, 2021 Rating: 5