இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுத்தினம் இன்று (26) புதன்கிழமை கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் கட்சியின் பொதுச் செயலளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் அமரர் அவர்களின் நினைவாக சி.எல்.எப் காரியாலயத்தில் உள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அன்னாரின் நினைவாக பிராஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு “பிரஜா விருட்சம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இ.தொ.காவின் இளைஞர் அணியின் தலைவர் ராஜமணி பிரசாத், செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதோடு, இந்த வருடத்திற்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் மலையகத்தின் பல பகுதிகளிலும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தலைவரின் ஓராண்டு நினைவுத்தினம் அனுஸ்டிக்கப்பட்டது...
Reviewed by Admin Ceylon East
on
May 26, 2021
Rating:
Reviewed by Admin Ceylon East
on
May 26, 2021
Rating:

