புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மதுபோதையில் புத்தர் சிலையை உடைத்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறையில் புத்தர் சிலை உடைப்பு
Reviewed by Sifnas Hamy
on
May 02, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
May 02, 2021
Rating:
