கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு சென்ட்ரல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இருந்த காய்ச்சல், இருமல் போன்ற நோய்களால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு நெகடிவ் என்று இருந்தது.
மீண்டும் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே கடந்த நாட்களில் என்னோடு நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் நான் விரைவில் பூரண சுகமடைவதற்கு உங்களுடைய பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறும் மிகவும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன் என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
