மிகவும் துன்பமயமான காலகட்டத்தில் இளம் சிறார்கள் தங்கள் கல்விப் புலத்தை விட்டு வெளியேறி வீடுகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில் - அரசு – கல்வி அமைச்சு – வலயக் கல்வி அலுவலகம் என்பன மாணவர்களிடம் உள்ள வறுமை, ஏழ்மை, தொழிநுட்பவசதிகள் எதனையும் கவனத்திற்கொள்ளாது ஒன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்துகொள்ளுமாறு மாணவர்களையும், ஒன்லைன் மூலம் பாடங்களை நடாத்துமாறு ஆசிரியர்களையும் கோரியுள்ளது. நல்ல விடயம்தாம்
இதுகால வரைக்கும் பாடங்களை சிறப்பாக செய்துவந்த பல ஆசிரியர்கள் தற்போது இற்றைப்படுத்தப்பட்ட தொழிநுட்பகருவிகளாக மடிக்கணனி, மேசைக்கணனி, அன்றொயிட் லேட்டஸ்ட் கையடக்க தொலைபேசி இல்லாத நிலையில் எவ்வாறு வகுப்புகளை மேற்கொள்ளமுடியும்? இதே நிலையில் சுமார் 50 வீதத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் உள்ளனர். ஒரு சில வளர்ந்த பாடசாலைகள் பொதுவான ஏற்பாடுகளை பாடசாலையில் செய்திருந்தாலும் அவை முழுமையான வெற்றியளிக்கவில்லை. But ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் இதில் ஈடுபடுகின்றனர். ஆனால் தேவையான தரவுகளை உட்படுத்த கணிணி வசதிகள் எல்லோரிடத்திலும் இல்லை.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவிருந்த மடிக்கணணி வழங்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
அதனையும் தடுத்துவிட்டு ஆசிரியர்களுக்கோ மாணவர்களுக்கோ எவ்விதமான தொழிநுட்ப ஏற்பாடுகளையும் செய்யாது, வீட்டைவிட்டு வெளியேறவும், கடைகளைத் திறக்கும் அனுமதியையும் மறுத்துவிட்டு எவ்வாறு இக்கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன¿
குறைந்தது ஆசிரியர்களுக்கு கடந்த பாடசாலை நாட்களில் தகவல்களைத் திரட்டி இலகுகடன் அடிப்படையிலாவது மடிக்கணணிகளை வழங்கியிருக்கவேண்டும், அல்லது சுமார் 35000 ரூபாவுக்கு மேற்பட்ட அன்றொயிட் கையடக்க தொலைபேசிகளை | Notebook/ Tab வழங்கியிருக்கவேண்டும். எல்லா ஆசிரியர்களும் வசதிபடைத்தவர்கள் அல்ல.!
தூரப் பிரதேசத்தில் இருந்து கடமையாற்றும், கவரேஜ் இல்லா இடங்களில் வதியும் ஆசிரியர்கள் பற்றியும், மாணவர்கள் பற்றியும் கவனம் செலுத்தாமல் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல.
எனவே, முதலில் ஆசிரியர்களுக்கு தொழிநுட்ப தொடர்பாடல் வசதிக்காக கல்வி அமைச்சு ஏற்பாடுகளை செய்யவேண்டும். அதன் பின்னர் வீட்டிலிருந்தவாறு கற்பித்தலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தலாம்.
அதேபோல் மாணவர்களின் நிலைமையைக் கருத்தற்கொண்டும், ஒரே குடும்பத்தில் பல பிள்ளைகள் இருக்கும் நிலையையும், வறுமை நிலையையும் கருத்திற்கொண்டு சமுர்த்தி ஊடாக அவர்களுக்கு வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும்.
ஏனெனில் சிறிய ஸ்கிறீன் உள்ள கையடக்க தொலைபேசிகளை தினமும் மாணவச் செல்வங்கள் காலை 8 – 1 வரை பயன்படுத்துகின்றபோது அவர்களின் கண்கள் பாதிப்படையும், செவிப்புலன்களும் சேதமடையும் நிலை ஏற்படலாம்.
இவ்வாறான செயற்பாடுகளே இந்த கொவிட் தடுப்பு காலத்தில் வெற்றியைத்தரும். எவ்வாறாயினும் அதிகமான ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் பணியை பல சிரமங்களுக்கு மத்தில் மேற்கொண்டுவருகின்றனர் என்பது எமது ஆசிரியர் குழாத்தின் பெருந்தண்மையை மீண்டும் ஒரு முறை உலகிற்கு பறைசாற்றி நிற்கின்றது.
எஸ்.எம் சஹாப்தீன்
நிந்தவுர் - பிரதேச செய்தியாளர்
ஒன்லைன் கற்றல் கற்பித்தல் செயற்பாடும் - அரசும்!
Reviewed by Sifnas Hamy
on
May 27, 2021
Rating:
Reviewed by Sifnas Hamy
on
May 27, 2021
Rating:
