இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருக்கும்
பிரயாணத்தடை காரணமாக மக்களுக்கான அத்தியவசிய சேவைகளை கிரமமாக வழங்கும் பொருட்டு தினமும் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் நடமாடும் வியாபார வாகனங்கள் மற்றும் மரக்கறி வாகனங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் உச்ச விலையை தினமும் மாநகர சபை பொதுமக்களுக்கு அறிவிக்க உள்ளது.
இதனால் கொள்ளைலாபம் ஈட்ட நினைக்கும் வியாபாரிகளை உடனடியாக மாநகர சபை இலக்கமான 071 6 275 275 என்ற இலக்கத்திற்கோ அல்லது முதல்வரின் 077 496 22 61 என்ற இலக்கத்திற்கோ அறிவிக்க முடியும் என்று அக்கரைப்பற்று மாநகர சபை அறிவித்துள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள விலைப் பட்டியலில் உள்ள மரக்கறி [நுவரேலியா] வகைகளின் விலை நாளைய விலைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
