பூஸ்டர் ஆயுர்வேத பானம் விநியோகம்!!!

(றிஸ்வான் சாலிஹு)

கொவிட்-19 கொரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய "பூஸ்டர் ஆரோக்கிய ஆயுர்வேத பானம்" விநியோகம் செய்யும் நிகழ்வு இன்று (19) புதன்கிழமை காலை அக்கரைப்பற்று சந்தை தொகுதியில் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வனஜீவராசிகள் வளத்துறை இராஜாங்க அமைச்சரின் இணைப்பதிகாரியும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரின் இணைப்பதிகாரியுமான தேச சக்தி ஏ.எம்.நிஹால் அவர்களுக்கு வைத்திய அத்தியட்சகரினால் ஆயுர்வேத பானம் வழங்கி வைக்கப்பட்டது.

டாக்டர் பீ.எம்.றஜீஸ், டாக்டர் திருமதி சமிலா, மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



பூஸ்டர் ஆயுர்வேத பானம் விநியோகம்!!! பூஸ்டர் ஆயுர்வேத பானம் விநியோகம்!!! Reviewed by Editor on May 19, 2021 Rating: 5