(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த டாக்டர். றிகாஸ் ரஹீம் சிறுநீர் தொகுதி தொடர்பான சத்திர சிகிச்சையின் உயர் தகைமையான FRCS Urology பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இவர் தற்போது இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் நகரில் சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி வருகின்றார்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனது MBBS கல்வியை நிறைவு செய்த இவர் ஏற்கனவே MRCS Edinburgh தகைமையை பெற்றிருப்பதோடு Edinburgh பல்கலைக்கழகத்தில் சிறுநீர் தொகுதி சத்திர சிகிச்சை கற்கை நெறியில் தனது முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார்.
இவர் அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் றிகாஸ்,சிறுநீர் தொகுதி சத்திர சிகிச்சையின் உயர் தகமை பரீட்சையில் சித்தி....
Reviewed by Editor
on
May 29, 2021
Rating:
