தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்...

சீனாவின் தயாரிப்பான சினபோம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் சீன நிறுவனத்துடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை முன்வைத்துள்ள யோசனைக்கு சீனாவினால் சாதகமான பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் மிகவும் சாதகமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(News.lk)

                                         

தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்... தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்... Reviewed by Editor on May 11, 2021 Rating: 5