கொரானா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்த உடல்களை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படும் நல்லடக்க விடயங்களில் இருக்கின்ற சவால்களும் தேவைப்படும் தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் அவர்களும் கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே அவர்களை இன்று (06) வியாழக்கிழமை அவரது அமைச்சில் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
அந்த வகையில், கொரோனா நோயின் தாக்கத்தினால் மரணம் ஆகின்ற உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதற்கும், தற்போது ஓட்டமாவடி பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப் படுகின்ற இடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஆளணிகளையும் பெற்றுக்கொள்வதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
May 06, 2021
Rating:

