அம்பாறை-கல்முனை சந்தியில் எதிர்ப்பு போராட்டம்!!!


(றிஸ்வான் சாலிஹூ)

அம்பாறை நகரிலுள்ள அம்பாறை -கல்முனை சந்தியில் மதுபானக் கடை திறக்கப்படுவதை எதிர்த்து இன்று (06) வியாழக்கிழமை காலை வீதியை மறித்து அப்பிரதேச மக்கள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் வீதியின் குறுக்கே அமர்ந்திருந்து எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டமையினால் வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, அம்பாறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



அம்பாறை-கல்முனை சந்தியில் எதிர்ப்பு போராட்டம்!!!  அம்பாறை-கல்முனை சந்தியில் எதிர்ப்பு போராட்டம்!!! Reviewed by Editor on May 06, 2021 Rating: 5