பிராந்திய ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளல்.

Paris

இலங்கை வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட எமது www.ceyloneast.com செய்தித்தளம் தனது சேவையை தேசிய மட்டத்தில் விஸ்தரிக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் செய்தியாளர்களை இணைத்துக் கொள்ளும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. ஏற்கனவே சில மாவட்டங்களின் பிரதேச செய்தி நிருபர்கள் எம்மோடு தற்போது தொடர்பில் உள்ளனர்.

அத்தோடு தமிழ் மொழியில் செய்திகளை எம்மோடு பரிமாறிக் கொள்ள விரும்பும் அனுபவமிக்க பிராந்திய மற்றும் பிரதேச செய்தியாளர்களின் சேவையை நாம் நாடியுள்ளோம்.

நாளாந்த நிகழ்வுகள் மற்றும் முக்கிய விடயங்களை செய்திப் பிரதிகளாகவும், படங்களாகவும், காணொளிகளாகவும் அனுப்பி வைக்கக் கூடிய அனுபவமிக்க செய்தியாளர்கள் தமது சுயவிபரக்கோவையை எமக்கு எதிர்வரும் 16.06.2021 க்கு முன்னர் அனுப்பி வைக்கலாம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : ceyloneast.com@gmail.com

ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் உடனடியாக உங்களது விபரங்களை மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றதும் அவை பரிசீலிக்கப்பட்டு நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் / உதவி ஆசிரியர் தங்களை தொடர்பு கொள்வார்கள்.

நிர்வாகம்
ceyloneast.com

பிராந்திய ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளல். பிராந்திய ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளல். Reviewed by Sifnas Hamy on May 19, 2021 Rating: 5