மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் மீண்டும் இரத்தப்போக்கு ஏற்படுதல் (கட்டாயம் பாருங்கள்)

மாதவிடாய் நிறுத்தம் வழமையாக பெண்களில் 45 வயதின் பின்னர் ஏற்படும். பெண்கள் பிறக்கும் போதே குறிப்பிட்டளவு தொகையான கருமுட்டைகளுடன் பிறக்கின்றனர். இவை படிப்படியாக பயன்படுத்தப்பட்டு முற்றாக முடிவடையும் போது மாதவிடாய் நிறுத்ததை அடைகின்றனர். சிலரில் 40 வயதுக்கு முன்னர் நடைபெறும் இது premature ovarian insufficiency எனப்படும்.

மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் ஹோர்மோன்களின் அளவு படிப்படியாக குறைவடைவதால் கர்ப்பப்பையின் உற்சுவர் மெலிவடைந்து செல்லும். கர்ப்பபையும் சிறதாக மாறிச்செல்லும். 

சில பெண்களில் மாதவிடாய் நிறுத்தத்தின் பின் மீண்டும் இரத்தப்போக்கு வரலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.


உதாரணமாக-

Atropic Vaginitis - ஹோர்மோன்கள் குறைவதால் பெண்ணுருப்பின் உற்சுவர் மெலிவடைந்து பிரிவதால் ஏற்படும் இரத்தப்போக்கு.

Polyp - சாதாரண சதை வளர்ச்சிகள்

Hormone மாத்திரைகள் பயன்படுத்தல்

அதேவேளை சில பெண்களில் இது கர்ப்பப்பை உற்சுவரில் அல்லது கர்ப்பப்பை கழுத்தில் ஏற்படக்கூடிய புற்று நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். 

மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டு மீண்டும் இரத்தப்போக்கு ஏற்படும் பெண்களில் பத்துப் பேரில் ஒருவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது.

எனவே, அவ்வாறு ஏற்படின் தட்டிக்கழிக்காது தகுந்த வைத்தியரை நாடி பரிசோதித்துப் பார்த்தல் மிக முக்கியமானது. 

அனைவருக்கும் scan பரிசோதனை செய்து பார்த்து மேலதிக சிகிச்சை அவசியமா அல்லது சாதாரணமானதா என்ற முடிவு செய்யப்படும். சந்தேகத்திற்கிடமான நிலைமைகளில் கர்ப்பபையின் உற்சுவரிலிருந்து கலங்களை எடுத்து அதனை பரிசோதித்தல் வேண்டும். 

அநேகமான சந்தர்ப்பங்களில் கர்ப்பப்பை புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே வெளிப்படும். எனவே முதலிலேயே கண்டறிந்தால் அதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் முற்றாக குணப்படுத்தலாம். 

எனவே மாதவிடாய் நிறுத்தம் நடைபெற்று ஒருவருடத்தின் பின் மீண்டும் இரத்தப்போக்கு ஏற்பட்டால் தாமதிக்காது வைத்தியரை நாடி அதற்க்கான சரியான மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.


Dr A C M Musthaq
MBBS MD MRCOG MSLCOG
Consultant Obstetrician and Gynaecologist
Base Hospital, Sammanthurai.




மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் மீண்டும் இரத்தப்போக்கு ஏற்படுதல் (கட்டாயம் பாருங்கள்) மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் மீண்டும் இரத்தப்போக்கு ஏற்படுதல் (கட்டாயம் பாருங்கள்) Reviewed by Editor on May 26, 2021 Rating: 5