சன நடமாட்டமுள்ள பகுதியில் தொற்று நீக்கி விசுறல்!!!

காத்தான்குடி பிரதான வீதியில் சன நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்ற பகுதிகளில் கிருமி நாசினி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று (12) புதன்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினை காத்தான்குடி பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நடவடிக்கையானது ரமழான் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சன நடமாட்டமுள்ள பகுதியில் தொற்று நீக்கி விசுறல்!!! சன நடமாட்டமுள்ள பகுதியில் தொற்று நீக்கி விசுறல்!!! Reviewed by Editor on May 12, 2021 Rating: 5