(றிஸ்வான் சாலிஹூ)
கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் நேற்றிரவு (25) செவ்வாய்க்கிழமை திடீரென பாரியதொரு குழி ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது என்று அந்த நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்துக்கு சென்ற பொறியியலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் பாரிய குழி!!!
Reviewed by Editor
on
May 26, 2021
Rating:
