(றிஸ்வான் சாலிஹூ)
புனித நோன்பு பெருநாள் நெருங்கியுள்ள இவ்வேளையில் பொதுமக்கள் பெருநாள் உடுப்பு கொள்வனவு செய்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளதால் கொவிட் -19 இன் பரவலும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கு, வெளி மாவட்டங்களிலிருந்து அல்லது கொவிட் வைரஸ் பரவலுள்ள ஊர்களிலிருந்து இந்த பகுதிகளிற்கு வருகை தந்துள்ளவர்கள் பற்றிய விபரங்களை உடனடியாக தங்கள் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) அல்லது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் தெரியப்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்க நீங்கள் பூரண ஒத்துழைப்பு தந்து உதவுமாறு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் அவசர வேண்டுகோள்!!!
Reviewed by Editor
on
May 07, 2021
Rating:
Reviewed by Editor
on
May 07, 2021
Rating:
